search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னையா குமார்"

    பீகாரில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கை எதிர்த்து டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். #LokSabha #KanhaiyaKumar #GirirajSingh
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம், பெகுசாராய் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் (வயது 32) போட்டியிடுகிறார்.

    இவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தேசத்துரோக வழக்கில் சிக்கியவர். இவர் பெகுசாராய் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த அறிவிப்பை டெல்லியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கே. நாராயணா வெளியிட்டு நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், “பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துபரிஷத் ஆகிய அமைப்புகள் சாதி, இனம் அடிப்படையில் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றன என்பதை வெளிப்படுத்த கடுமையாக உழைத்தவர் கன்னையா குமார். நாட்டில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான அரசியல் முகமாக அவர் ஆகி உள்ளார்” என கூறினார்.
    டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான கன்னையா குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #KanhaiyaKumar
    பாட்னா:

    டெல்லியில் அமைந்துள்ளது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். இதன் மாணவர் சங்க தலைவரான கன்னையா குமார் உள்பட 4 மாணவர்கள் கடந்த 9.2.16 அன்று அப்சல் குரு நினைவு தினத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளிவந்தார்.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இவர் பீகார் மாநிலம் பெகுசராய் லோக்சபா தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.

    கன்னையா குமார் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அப்சல் குருவை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #KanhaiyaKumar
    ×